சென்னை: தமிழ்நாடு வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டாவின் நிகழ்ச்சியின்போது, அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி நட்டா பேச்சு, மு.க.ஸ்டாலினுக்கு இன்று நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தி.மு.க.வின் விளக்குகள் அணைக்கப்படும் நேரம் விரைவில் வரும் என்று எச்சரிக்கை விடுத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக சென்னையில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுத்தநிலையில், அதை மீறி துறைமுகம் பகுதியில் யாத்திரை நடைபெற்றது. இதில் ஜே.பி.நட்டா, எல்.முருகன் உள்பட பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையில் கலந்துகொள்வதற்காக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சென்னை வந்தார். அவரது கூட்டத்துக்கு தமிழ்நாடு பல பகுதிகளில் அனுமதி மறுத்த நிலையில், வடசென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக. சென்னையில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்க விமான நிலையம் வந்த ஜே. பி. நட்டாவை சென்னை விமான நிலையத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பல தலைவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதங்களும் நடந்தன. இருந்தாலும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை துறைமுகம் பகுதியில் ல் தங்கசாலை தெருவில் உள்ள மணி குண்டு (near mint metro) அருகாமையில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார். அப்போது, “தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களின் இதயத்தில் உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் மனதில் தமிழகம் மிகவும் நெருக்கமாக உள்ளது. பிரதமர் மோடி உலகின் எந்த பகுதிக்கு சென்று உரையாற்றினாலும் தமிழ் மொழி, தமிழ் புலவர் பற்றி பேசி வருகிறார். ததமிழ்நாடு மிகச்சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டது. தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு மிகப்பெரிய பங்களித்துள்ளது. தமிழ்நாடு என்றால் கலாசாரம், பண்பாடு, பழமையான மொழி குறித்து பெருமை கொள்கிறோம். தமிழ்நாட்டின் சாதுக்கள், சன்னியாசிகள், தலைவர்கள் பற்றி பெருமை கொள்கிறோம்.
தமிழகத்தின் பெருமையான செங்கோலை நாடாளுமன்றத்தில் நீதி, நேர்மை, சிறந்த ஆட்சிக்கான அடையாளமாக பிரதமர் மோடி மாற்றி உள்ளார். இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாடாளுமன்றத்திற்குள் நுழையும்போது செங்கோல் கொண்டு செல்லப்பட்டது நமக்குக் கிடைத்த பெருமையாகும். தமிழ்நாட்டின் மைந்தன் எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மோடி பாரத ரத்னா விருது அறிவித்துள்ளார்.
தமிழர்கள் கடும் உழைப்பாளிகள். ஆனால் இத்தனை சிறப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு இன்று மிகவும் மோசமான தலைமை உள்ளது. திமுக தலைமையில் இங்கு மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. திமுக தலைமைக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை. இன்று நான் வரும் வழியில் மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன. அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இது எனக்கு எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்தியது. இதுதான் ஜனநாயகமா? இதுதான் தமிழகத்தின் கலாச்சாரமா?
ஆனால் திமுகவுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஸ்டாலின் அவர்களே, உங்களை மக்கள் வெளியே தூக்கியெறியும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் இங்கு பார்த்த காட்சிகள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டன. கடைக்காரர்களை போலீஸார் கட்டாயப்படுத்தி கடையை அடைக்க வைக்கின்றனர்.
இதுதான் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் ஜனநாயகமா? இதுதான் திமுகவின் பாரம்பரியமா? இதுபோன்ற திமுக தலைவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாக (எம்.பி.க்களாக) டெல்லிக்கு வர விடலாமா? விடவே கூடாது. நான் வரும் போது தெரு விளக்குகளை தான் திமுக ஆஃப் செய்தது. ஆனால் மக்களோ திமுகவையே விரைவில் ஆஃப் செய்யப் போகிறார்கள்.. உங்களை வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தி.மு.க.வின் விளக்குகள் அணைக்கப்படும் நேரம் விரைவில் வரும்” என்று ஜே.பி நட்டா எச்சரித்தார்.