டில்லி
இந்த வருடத்துடன் காலாவதியாகும் சில நிறுவனங்களின் தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செல்போன் சேவைகளுக்கான 8 அலைவரிசைகளை ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த ஆண்டு காலாவதியாகும் சில நிறுவனங்களின் திவால் நிலை செயல்முறைக்கு உட்பட்ட அலைவரிசைகள் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 800, 900, 1800, 2100, 2300, 2500, 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் கிடைக்கும் அனைத்து அலைவரிசைகளும் ஏலத்தில் விடப்படவுள்ளது.
ஏலமிடப்படும் தொலைத் தொடர்பு அலைக்கற்றைகளின் அடிப்படை மதிப்பு ரூ.96,317.65 கோடியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது