சென்னை
தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் – நாகர்கோவில் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது.
நேற்று தெற்கு ரயில்வே ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில்,
”ஏற்கனவே நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மார்ச் 1 ஆம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து மாலை 6. 20 மணிக்குப் புறப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-06428) கொச்சுவேலி வரை இயக்கப்படும்.
மறு மார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06433) மார்ச் 2-ந் தேதி முதல் கொச்சுவேலியில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும்.”
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.