சென்னை

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தமிழகத்துக்குக் கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இம்மாத இறுதிக்குள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி இ அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்குக் கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சங்கர்மேல் குமாவத்தும், இணை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீ காந்த் மற்றும் அரவிந்தன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்திற்குக் கூடுதல் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியிருந்தர்.  அதன் அடிப்படையில் இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த நியமனங்களை அறிவித்துள்ளது;