2023 டிசம்பர் மாதம் மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து ரசாயன புகை குண்டுகளை வீசிய வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் இவர்களை துன்புறுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜரான இவர்கள், போலீசார் தங்களை கொடுமைப்படுத்தினர், வெற்றுத் தாளில் கையெழுத்திட நிர்பந்தித்தனர் என்று பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

மேலும், “சமூக வலைதள கணக்குகள், இமெயில், செல்போன்களின் பாஸ்வேர்டு ஆகியவற்றை அளிக்குமாறு நிர்பந்தித்திததாகவும் பாலிகிராஃப் சோதனை செய்யும் போது அரசியல் கட்சிகளின் பெயரை தெரிவிக்குமாறும் மிரட்டப்பட்டோம்” என்று தெரிவிதித்துள்ளனர்.

“உடலில் மின்சாரம் பாய்ச்சி அரசியல் தலைவர்களை சிக்க வைக்க எங்களை கொடுமைப்படுத்தினர்” என்று இவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து 6 பேரின் புகார் மனு தொடர்பாக பதில் அளிக்க டெல்லி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணையை பிப்.17ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

[youtube-feed feed=1]