சென்னை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எதிர்த்த ஜி எஸ் டி ஆணையர் பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

ஐ ஏ எஸ் அதிகாரியான பாலமுருகன் ஜி எஸ் டி துணை ஆணையராகப் பதவி வகித்து வருகிறார். இவர் நாளை பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
இவர் சமீபத்தில் சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்
தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை எதிர்த்த பாலமுருகனை பணியிடைநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில், இன்று அவரை இடைநீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Patrikai.com official YouTube Channel