டெல்லி: கியான்வாபி மசூதி கட்டுவதற்கு முன்னர், அந்த இடத்தில் இந்து கோயில் இருந்துள்ளது, அதை உடைத்துதான் மசூதி கட்டப்பட்டு உள்ளது என இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த, இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற மண்டல இயக்குநர் கேகே முகமது அயோத்தியை போல் ஞானவாபி மற்றும் ஷாஹி இத்கா நிலத்தை இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் கியான்வாபி மசூதி உள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் இருந்த கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னர்கள் மசூதி கட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு சாட்சியாக கோவிலின் தூண்களைக்கொண்டே மசூதி கட்டப்பட்டிருப்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளத.
இதற்கிடையில், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் மாவட்ட நீதிமன்றம், மசூதிக்குள் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை கள ஆய்வு நடத்த வேண்டும். அங்கு கோயில் மீது மசூதி கட்டப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று வாராணசி மாவட்ட நீதிபதி அஜயா கிருஷ்ண விஷ்வேஷா கடந்த 2023 ஜூலை 21-ம்தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தின.
அதன் அடிப்படையில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்தியது. மொத்தம் 2150.5 சதுர மீட்டர் அளவுக்கு வேலி அமைத்து அறிவியல்பூர்வமான ஆய்வு நடத்தப்பட்டது. கள ஆய்வு முடிந்த நிலையில் 839 பக்க ஆய்வறிக்கையை நீதி மன்றத்தில் தொல்லியல் துறை சமர்ப்பித்தது. அதன் நகல்கள் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கின் இரு தரப்பினருக்கும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது கியான்வாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கை தகவல் வெளியாகி உள்ளது. அதில், கியான்வாபி மசூதி 17-ம் நூற்றாண்டில் கட்டப்படுவதற்கு முன்பு அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன. மேற்கு பகுதியில் தற்போதுள்ள சுவர், இந்து கோயிலின் மீதமுள்ள சுவர். இந்தச் சுவர் செங்கற்களாலும், ‘மோல்டிங்’ சிற்பங்களாலும் கட்டப்பட்டுள்ளது. அங்கு முன்பு இந்து கோயில் இருந்துள்ளது.
கள ஆய்வின் போது கிடைத்த கல்வெட்டுகள், சிற்பங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் அங்கு ஏற்கெனவே கோயில் இருந்ததை உறுதி செய்துள்ளன. மேலும், அங்கு மசூதி கட்டுவதற்கு ஏற்கெனவே இருந்த கோவிலின் தூண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கட்டிடத்தின் ஒரு அறைக்குள் அரபு – பாரசீக கல்வெட்டு காணப்பட்டது. அது, அவுரங்கசீப்பின் 20-வது ஆட்சிஆண்டில் மசூதி கட்டப்பட்டுள்ளதாக (1676-77) குறிப்பிடுகிறது. எனவே, 17- ம் நூற்றாண்டில் அவரது ஆட்சியின்போது ஏற்கெனவே அங்கு இருந்த கோவில் கட்டிடம் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அயோத்தியை போல் ஞானவாபி மற்றும் ஷாஹி இத்கா நிலத்தை இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற மண்டல இயக்குநர் கேகே முகமது தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இவரது ஆய்வு என்பது மிகவும் முக்கிய காரணமாக இருந்த நிலையில் தான் கேகே முகமது இப்படி பரபரப்பான தகவலை தெரிவித்து அதன் பின்னணி காரணத்தையும் கூறியுள்ளார்.
அயோத்தியில் 2.7 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக 500 ஆண்டுகள் பிரச்சனை என்பது இருந்து வந்தது. இந்த பிரச்சனைக்கு கடந்த 2019ல் தீர்வு காணப்பட்டது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் பிரச்சனைக்கு தீர்வாக அமைந்தது. அதாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராமர் கோவிலுக்கு 2020ல் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது கோவிலில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில்கும்பாபிேஷகம் நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்று கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது பால ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை செய்தார். இதையடுத்து பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் போல இந்தியாவில் வேறு சில இடங்களிலும் பிரச்சனைகள் உள்ளன. அதில் முக்கியமாக ஞானவாபி மசூதி, மதுரா கிருஷ்ணன் கோவில் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதாவது அயோத்தி ஞானவாபி மசூதி மற்றும் கிருஷ்ண ஜென்ம பூமியான மதுராவில் ஷாஹி இத்கா நிலம் தொடர்பாக பிரச்சனை இருக்கிறது.
இந்நிலையில் தான் இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற மண்டல இயக்குனர் கேகே முகமது பரபரப்பான கருத்தை கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இவர் அங்கு மேற்கொண்ட ஆய்வு என்பது மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது. பிபி லால் தலைமையிலான ஆய்வுக்குழுவில் இவர் இடம்பிடித்து இருந்தார். இந்நிலையில் தான் முகமது, தற்போது, ஞானவாபி மற்றும் ஷாஹி இத்கா நிலத்தை இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஞானவாபி ஆலயத்தின் வரலாறு:
4-5 ஆம் நூற்றாண்டு: குப்தர் காலத்தில் காசி விஸ்வநாதர் கோவிலை கட்டியதாக பொதுவாக விக்ரமாதித்யா என அழைக்கப்படும் இரண்டாம் சந்திரகுப்தா கூறப்படுகிறார்.
635: புகழ்பெற்ற சீனப் பயணி ஹியூன் சாங் தனது படைப்புகளில் கோயிலையும் வாரணாசியையும் விவரித்தார்.
1194-1197: முஹம்மது கோரியின் உத்தரவுகளால் கோயில் பெருமளவில் அழிக்கப்பட்டது, வரலாறு முழுவதும் தொடர்ச்சியான இடிப்புகள் மற்றும் மறுகட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.
1669: முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் அறிவுறுத்தலின் பேரில், கோவில் இறுதி முறையாக இடிக்கப்பட்டது, அதன் இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டது.
1776-78: இந்தூரின் ராணி அஹில்யாபாய் ஹோல்கர் ஞானவாபி மசூதிக்கு அருகில் உள்ள கோவிலை மீட்டெடுத்தார்.
1936 ஆம் ஆண்டில் , கியான்வாபி வளாகம் முழுவதும் நமாஸ் வழங்குவதற்கான உரிமைக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
வாதிகள் ஏழு சாட்சிகளை ஆஜர்படுத்தினர், அதேசமயம் பிரிட்டிஷ் அரசாங்கம் பதினைந்து சாட்சிகளை வழங்கியது.
ஞானவாபி மசூதியில் தொழுகை நடத்துவதற்கான உரிமை ஆகஸ்ட் 15, 1937 இல் வெளிப்படையாக வழங்கப்பட்டது , ஞானவாபி வளாகத்தில் இதுபோன்ற பிரார்த்தனைகளை வேறு எங்கும் செய்ய முடியாது என்ற எச்சரிக்கையுடன்.
உயர் நீதிமன்றம் ஏப்ரல் 10, 1942 அன்று கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநிறுத்தி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது .
பண்டிட் சோம்நாத் வியாஸ், டாக்டர் ராம்ரங் ஷர்மா மற்றும் பலர் வாரணாசி நீதிமன்றத்தில் அக்டோபர் 15, 1991 அன்று , ஞானவாபியில் ஒரு புதிய கோயிலைக் கட்டவும், வழிபடுவதற்கான சுதந்திரத்தையும் கோரி வழக்குத் தொடர்ந்தனர் .
இந்த உத்தரவை எதிர்த்து 1998 ஆம் ஆண்டு அஞ்சுமன் இனாசானியா மசாஜித் மற்றும் உ.பி சன்னி வக்பு வாரியம் லக்னோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன .
மார்ச் 7, 2000 அன்று , பண்டிட் சோம்நாத் வியாஸ் காலமானார்.
முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி, இந்த வழக்கில் வாதியாக அக்டோபர் 11, 2018 அன்று நியமிக்கப்பட்டார்.
தொல்லியல் ஆய்வு நடத்துவதற்கான உத்தரவு ஏப்ரல் 8, 2021 அன்று வெளியிடப்பட்டது.
கணக்கெடுப்பு ஏப்ரல் 14, 2022 சனிக்கிழமை தொடங்கப்பட்டது .