சென்னை
நடிகை குஷ்பு தாம் இறக்கும் வரை இஸ்லாமியர் என வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்..
கடந்த 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்குப் புகழ் பெற்றவர் ஆவார், இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பாஜகவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு தற்போது பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.
குஷ்பு சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கவில்லை என அறிவித்து இருந்தார். அவர் ‘தற்போது பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் நாம் ராமரைப் பார்க்க இருக்கிறோம். நிறையப் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது’ என்றும் தெரிவித்து இருந்தார்.
குஷ்புவின் ரசிகர் ஒருவர் பாஜக குறித்து முன்பு குஷ்பு பகிர்ந்திருந்த பழைய பதிவு ஒன்றைத் தனது பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக குஷ்பு தனது பதிவில்,
‘நான் இறக்கும் வரை இஸ்லாமியர் தான் சகோதரனே. நான் மதம் மாறவில்லை, மாறவும் மாட்டேன். உங்களைப் பொறுத்தவரை எல்லாம் ஆன்மீகம் மதம் சார்ந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆன்மீகம் ஒருமைப்பாடு பற்றியது.
கடவுள் ஒருவரே என்று நான் நம்புகிறேன். ராமர் அனைவராலும் வணங்கப்படுகிறார். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்துங்கள், நீங்கள் நன்றாக உணருவீர்கள்’
என்று தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவு வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.