கொழும்பு: பிரதமர் மோடி 3 நாள் பயணமாக சென்னை, ஸ்ரீரங்கம் மற்றம் ராமேஸ்வரம் செல்ல உள்ள நிலையில், இலங்கை அரசு சிறை பிடித்து வைத்திருந்த தமிழக மீனவர்கள் 40 பேரை இன்று விடுதலை செய்துள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் 40 பேரை விடுதலை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேரும், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரும் , நாகை மாவட்டம் மீனவர்கள் 10 பேர் என 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும் வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் பிரதமர் மோடியும் தமிழ்நாடு வருகை தந்துள்ளதால், இலங்கை அரசு தமிழக மீனவர்கள் 40 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.
விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்குப்பட்டு ஓரிரு நாளில் தமிழ்நாடு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.