சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ.129.20 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
சேலம் மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த மேம்பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மேம்பாலத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, சேலத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான மேம்பாலப் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் பொன்னமாபேட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று தெரிவித்தார்.