கர்நாடக மாநிலம் நிபானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறினார்.
மேலும், ராமர் பெயரில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.
கும்பாபிஷேக விழாவிற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் 11 நாள் உண்ணாவிரதம் குறித்து பேசிய பவார், “ராமர் மீது அவருக்கு உள்ள பக்தியை நான் மதிக்கிறேன், ஆனால் வறுமையை ஒழிக்க அவர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருந்தால், அது நடந்திருந்தால், பொதுமக்கள் அதைப் பாராட்டியிருப்பார்கள்” என்று பேசினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பூஜைகள் துவங்கியுள்ள நிலையில் ஜனவரி 22ம் தேதி ராம் லல்லா சிலை நிறுவப்பட உள்ளது. .
இந்த நிலையில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.