சென்னை
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் விருதுகளை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
தமிழக அரசின் விருது வழங்கும் விழா இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்துள்ள. விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விருதுகளை வழங்கி உள்ளார்.
விருது பெற்றோர் விவரம் வருமாறு
அய்யன் திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கப்பட்டது .
பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்திற்கு வழங்க்கபட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் விருது .உ. பலராமனுக்கு வழங்கப்பட்டது.
மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கு வழங்கப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் ம. முத்தரசுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்த்தென்றல் வி.க. விருது பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபனுக்கு வழங்கப்பட்டது,
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் விருது தமிழக அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியனுக்கு வழங்கப்பட்டது
டாக்டர் அம்பேத்கர் விருது பி. சண்முகத்திற்கு வழங்கப்பட்டது..