டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக டெல்லி முதலமைச்சருக்கு 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எற்கனவே 3 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில், தற்போது 4வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லியை ஆட்சி செய்து வரும், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு மீது கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக டெல்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், கலால் கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது.
ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில், தற்போது, 4வது முறையாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ED சம்மன் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள, டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக, “ஒரு சாட்சியாக அல்லது சந்தேகத்திற்குரியவராக” அவர் எந்த நிலையில் அழைக்கப்படுகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.