சிவமொக்கா
கர்நாடகா முதல்வர் சித்தராமையா தாம் அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்,
வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த கும்பாபிஷேகத்துக்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே உள்ளிட்டோர் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் செய்தியாளர்களிடம்.
”ராமருக்கு நாங்கள் எதிரிகள் இல்லை. ராமரை வைத்து அரசியல் செய்யும் பாஜகவை தான் எதிர்க்கிறோம். நாங்களும் ராம பக்தர்கள் . பாஜகவினர், ராமரை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அயோத்தியில் ராமர் சிலை வரும் 22ஆம் தேதி நிறுவப்படுகிறது. அதற்கு பிறகு நானும் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வேன். மேலும் எங்கள் கட்சி தொண்டர்களும் அந்த கோவிலுக்குச் செல்வார்கள்.”
என்று கூறி உள்ளார்.