சென்னை

னைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

மக்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.  எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காகத் தமிழக அரசு ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பலருக்கு பரிசு தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்ட நிலையில், அரசு அதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். அவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்குப் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கவுள்ளார்.