டோக்கியோ

ப்பானில் விமானத்தில் தீ பிடித்த நிலையில் எமெர்ஜென்சி ஸ்லைடு வழியாகப் பயணிகள் வெளியேறி உள்ளனர் .

இன்று ஜப்பான் தலைநகரான டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம், கடலோர காவல்படை விமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்து பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்டது.

வேகமாக வந்து மோதிய நிலையில் தீப்பற்றியபடி பாய்ந்து வந்த பயணிகள் விமானம் சிறிது தூரம் ஓடுபாதையில் சென்று, அதன்பின் நின்றுவிட்டது. கடலோர காவல் படையின் விமானமும் அதேசமயம் தீப்பிடித்து எரிந்தது.

விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு பயணிகளை விமானத்தின் அவசரக்கால வெளியேறும் கதவைத் திறந்து அதன் அவசரக்காலம் ஸ்லைடு (சரிவுப்பாதை) வழியாக ப மீட்டனர்.

விமானத்தின் ஒருபுறம் தீப்பிடித்து எரியும் நிலையில் விமானத்தின் மறுபுறம் எமர்ஜென்சி ஸ்லைடு வழியாகப் பயணிகள் அவசரம் அவசரமாகச் சறுக்கிக்கொண்டு வெளியேறியது மக்களைப் பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.