திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த ஆண்டு (2023) பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எவ்வளவு என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2023-ம் ஆண்டு உண்டியல் காணிக்கை ஆயிரத்து 398 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.116 கோடி கிடைத்தது. இது, கோவில் வரலாற்றில் தொடர்ந்து 22-வது முறையாக உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது என்றும், மேலும் 2023-ம் ஆண்டு ஏழுமலையான் கோவிலில் 2 கோடியே 52 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளது.
அத்துடன், கடந்த ஒரு ஆண்டு (2023) உண்டியல் காணிக்கையாக ரூ.1,398 கோடி கிடைத்துள்ளது. திருப்பதி கோவில் வரலாற்றில் தொடர்ந்து 22-வது முறையாக உண்டியல் காணிக்கை ரூ.1000 கோடியை தாண்டியது உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.