அயோத்தி

ராமர் கோவில் திறப்பு விழா அன்று பொதுமக்கள் யாரும் அயோத்திக்கு வர வேண்டாம் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்து மத வழிபாட்டு தலமான ராமர் கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது, மேலும் அயோத்தி ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் மோடி அயோத்தி சென்று அயோத்தி விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தைத் திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 15 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி,

”ஒட்டு மொத்த உலகமும் வரும் 22 ஆம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதிஷ்டை (ராமர் சிலை நிறுவுதல்) நிகழ்ச்சிக்காக  காத்திருக்கிறது. இதன் மூலம் நமது பாரம்பரியம், வளர்ச்சியின் வலிமை  முன்னோக்கிச் செல்ல உள்ளது. 

பொதுமக்கள். வரும் 22ம் தேதி அயோத்திக்கு வரவேண்டாம். ராமர் கோவில் திறப்பு விழாவிற்குச் சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அதனால் பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.” 

என்று தெரிவித்துள்ளார்.