தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை அடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் உடல் நாளை மாலை 4:45 மணிக்கு கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், கோயம்பேடு அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

மேலும், தேமுதிக தொண்டர்கள் பெருமளவு வாகனங்களில் சென்னையை நோக்கி திரள்வதை அடுத்து அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]