காஞ்சிபுரம்: இன்று அதிகாலை காஞ்சிபுரத்தில் இரண்ட ரவுடிகள் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது 2 காவலர்கள் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (37). பிரபல ரவுடியான இவர் மீது காஞ்சிபுரம், விஷ்ணு காஞ்சி காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளகிளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், இந்த கும்பலைச் சேர்ந்த ரகுவரன், கருப்பு அசோக் ஆகிய இரண்டு ரவுடிகள் ரயில் நிலையம் அருகே ஒரு இடத்தில் மறைந்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர், அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது தப்பியோட முயன்ற இரண்டு ரவுடிகளும் காவல்துறையனரை தாக்க முயன்றதாகவும், அதையடுத்து பாதுகாப்பு கருதி காவல்துறையினர் அவர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரண்டு ரவுடிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது ரவுடிகள் இரண்டு போலீசார் தாக்கியதில் காயமடைந்த 2 போலீசார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளின் பெயர் ரகு என்கிற ரகுவரன், கருப்பு பாட்ஷா என்கிற ஹசைன் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் இருவரும் காவல்துறையினரை அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்துள்ளனர். சிறப்புக் காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகிய இருவரையும் ரவுடிகள் அரிவாளால் தாக்கியுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்கையும், பொதுமக்கள் அமைதியையும் காப்பாற்றும் விதமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தில் காலையில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.