மதுரை
ரயில் விபத்தை தவிர்த்தற்காக மதுரை ரயில்வே கோட்ட ஊழியருக்குத் தேசிய விருது அளிக்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்குத் தேசிய அளவில் ‘அதிவிசிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு இந்த விருதுக்கு இந்திய அளவில் 100 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தெற்கு ரயில்வே அளவில் 6 ரயில்வே ஊழியர்கள், 3 அதிகாரிகள் தேசிய விருது பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர்
இதில் மதுரை கோட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளராக உள்ள வீரபெருமாள் என்பவர் ரயில் பாதையில் விரிசல் இருப்பதை அறிந்து விபத்தைத் தடுத்ததற்காகத் தேசிய விருது பெற இருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel