சென்னை: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கடந்த அக்.25ம் தேதி சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வீசினார். இதையடுத்து அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர்  கைது செய்தனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தை, காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். மேலும், நீட்டுக்கு எதிராக அவர் குண்டு வீசினார் என்றும் கூறப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஏற்று விசாரித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல்துறை ஒப்படைத்தது.

இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை இன்று காலை ஆளுநர் மாளிகை அருகே  பெட்ரோல் குண்டு வீசப்பட்ட  இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தடயவியல் அதிகாரிகள் துணையோடு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் ஆயுதப்படை காவலர் சில்வானை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமைக்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்த பெட்ரோல் குண்டு வீசிய  கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு செய்துள்ளது. மேலும்,  சம்பவத்தன்று ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவம் நடத்திய சில தினங்களுக்கு முன்னர் தான் கருக்கா வினோத் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கருக்கா வினோத் குண்டர் சண்டத்தில் கைது…

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்! விசாரணைக்கு எடுத்தது என்ஐஏ…