செங்கல்பட்டு
கன மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும்.
’மிக்ஜம்’ எனப் பெரியடப்படுள்ள இந்த புயல் வரும் 4 ஆம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5ஆம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிகக் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் புயல் கரையைக் கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியே வர வேண்டாம் எனச் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வரும் திங்கட்கிழமை கனமழை எச்சரிக்கை காரணமாகசென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதைப் போல் ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.