திருப்பதி
திருப்பதி கோவிலில் உண்டியல் மூலம் சென்ற மாதம் ரூ.108.45 கோடி வசூல் ஆகி உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 19 லட்சத்து 73 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதியில் கடந்த மாதம் 108 கோடியே 46 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் பக்தர்கள் வாங்கிச் சென்ற லட்டுக்களின் எண்ணிக்கை 97 லட்சத்து 47 ஆயிரம் என?வும், கடந்த மாதம் 7 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel