தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயில் உலக புகழ்பெற்ற ஒன்றாகும்  இந்தக் கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். இக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

கோயிலுக்கு வரும் வெளி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அணியும் ஆடை ஒரு சிலருக்கு முகம் சுழிக்க வைக்கிறது. எனவே இதைத் தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோயில் நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாக்கும் இடம் என இரண்டு இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஆண்கள் வேட்டி, சட்டை பேண்ட் அணிந்து வரலாம் என்றும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. பக்தர்கள் பலரும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.