சென்னை
சென்னை மெட்ரோ ரயிலில் சென்ற மாதம் 80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

பயணிகளுக்குச் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. போக்குவரத்து மேலும் மெட்ரோ ரயில் சேவை நெரிசலைத் தவிர்க்க பெரும்பாலான மக்களின் தேர்வாக உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில்களில் சென்ற மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் நவம்பர் 10 ஆம் தேதி அதிகபட்சமாக 3.35 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
இனி வாட்ஸ் – அப் மற்றும் இணைய பணப்பரிமாற்று செயலிகள் மூலம் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel