சென்னை
இன்று சென்னையில் வணிகப்பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,968.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அதாவது மாதத்தின் முதல் நாள் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவிக்கின்றன.
அதன்படி டிசம்பர் ஒன்றாம் தேதியான இன்று, வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.26.50 எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
இதனால் சென்னையில் ரூ.1,942-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர், தற்போது ரூ.26.50 உயர்ந்து ரூ.1,968.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel