மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 15000 மகளிருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ட்ரான் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் 2 கோடி மகளிரை லட்சாதிபதி ஆக்கும் திட்டத்துடன் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் அதன் ஒரு கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
ட்ரான் மூலம் தங்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான வருமானத்தை ஈட்ட ‘பிரதம மந்திரியின் மகளிர் விவசாய மைய்யத்தில்’ நடைபெறும் இந்த பயிற்சி வகை செய்யும் இது விஷிட் பாரத் சங்கல்ப் யாத்ரா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணொளி மூலம் இந்த திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி முதல்கட்ட பயனாளிகளிடம் உரையாடினார், ‘இதன் மூலம் பாஜக அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக’ அப்போது அவர் தெரிவித்தார்.