டெல்லி: நாளை (நவம்பர் 30) நாடு முழுவதும் நடைபெறும் ரோஜ்கார் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை காணொளி காட்சி மூலம் வழங்கி உரையாடுகிறார்.
நாடு முழுதும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு , ‘ரோஜ்கார் மேளா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரமர் மோடி பணியாணைகளை வழங்கி வருகிறார். இதன் தொடக்க விழா கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ந்தேதி நடைபெற்றது. அதன்படி, ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும் திட்டமான ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து, அன்றைய தினம் நாடு முழுவதும் 75ஆயிரம் பேருக்கு பணி நிமயன ஆணை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அவ்வப்போது, மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் ஆகியவற்றின் பல்வேறு துறைகளின் உதவியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு கட்டங்களில் ‘ரோஜ்கார் மேளா’க்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதி நடந்த வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கினார்.
இந்த நிலையில், நவம்பர் 30ந்தேதி அன்று மாலை 4மணி அளவில் மேலும் 51 ஆயிரம் பேருக்கு ரோஜ்கார் மேளா திட்டத்தின்படி, காணொளி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு வழங்கி, பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் 37 இடங்களில் நடைபெறுகிறது.