டெல்லி: இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்‍கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி,  nta.ac.in என்ற இணையதளத்தில் பாடத்திட்டங்களை அறிந்துகொள்ளலாம்.

2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான  திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் 2024ம் ஆண்டு மே மாதத்தில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.  இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. அதன்படி  இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 2024 ஆம் ஆண்டு  மே 5 ஆம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான முடிவுகள் ஜூன் 2வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் அடிப்படை மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.  பொதுவாக மத்தியக் கல்வி வாரியமான என்சிஇஆர்டி 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும். நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க தனியாக பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள் தாங்களாகவோ, பள்ளி மற்றும் பயிற்சி மையங்கள் மூலமாகவோ, நீட் தேர்வுக்கான பயிற்சியைப் பெறலாம்.

நீட் தேர்வில் பொதுவாக மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். இதில், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும்.  இதில், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்படும். இதில் 45 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதுமானது. அதேபோல உயிரியல் பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. இதில் 90 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதுமானது. அதேபோல உயிரியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் 720 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள். தவறான பதிலுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்கும் என்பதால், மாணவர்கள் கவனத்துடன் எழுதுவது அவசியம். இதற்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் nta.ac.in. எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனா​ காலக்‍கட்டத்தில் மாணவர்கள் பயின்ற படத்திலிருந்து மட்டும் நீட் தேர்வுக்கான கேள்விகள் இடம் பெறும் வகையில் தேசிய தேர்வு முகமை பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டம் தவிர்த்து மீதமுள்ள எந்த பாடங்களை மாணவர்கள் பயில வேண்டும் என்பதற்கான பாடத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் https://www.nta.ac.in/Download/Notice/Notice_20231122154404.pdf என்ற இணைப்பை கிளிக் செய்து, பாடத் திட்டத்தை முழுமையாக அறியலாம்.

Neet 2024 Syllubus – Notice_20231122154404