சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும் என்று கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என கூறியுள்ளது.
தற்போது வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி இருக்கும் காரணத்தால் சென்னை உள்பட வட தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், மேலடுக்கு சுழற்சி காற்றின் வேகம் வட தமிழகம் அருகே இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அதன் பிறகு அந்த மேலடுக்கு சுழற்சி படிப்படியாக அரபிக் கடலை நோக்கி செல்லும் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து உள் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று குறிப்பாக மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையை பொருத்தவரை பகலில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் மாலை மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்யும் என்றவர், அக்டோபரில் குறைவான மழை தான் தமிழகத்தின் பெய்துள்ளது என்றும் நவம்பரில் ஓரளவுக்கு மழை பெய்து உள்ளதால் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என கணித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “இன்று (நவம்பர் 22) காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.