கோவை
கோவை மாவட்ட நிர்வாகம் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உள்ளது.
கடந்த சில நாட்களாகக் கோவை மாவட்டத்தில் புளூ வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. புளூ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே கோவையில் புளு வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு எதிரொலியால், பொது வெளியில் செல்லும் போது முகக் கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியவை கூறப்படுகிறது. எனினும் காய்ச்சல் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.