சென்னை: பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை சங்கர நேத்ராலயாவின் இந்திய நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.எஸ்.பத்ரிநாத். இவர் கடந்த 1996ம் ஆண்டில் பத்மபூஷன் பெற்றார். மேலும் பத்மஸ்ரீ மற்றும் டாக்டர் பிசி ராய் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர்.
தமிழ்நாட்டின் பிரபல கண் மருத்துவமனை மற்றும் முதன்மையான கண் சிகிச்சை சங்கர் நேத்ராலயா நிறுவனர் மருத்துவமனையான டாக்டர் பத்ரிநாத் காலமானார். அவருக்கு வயது 83. வயது முதிர்வு காரணமாக அவர் காலமானார்..டாக்டர் பத்ரிநாத் காலமானார் என்ற செய்தியை தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ராம சுகந்தன் உறுதிப்படுத்தினார். அவரது மறைவுக்காக அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டாக்டர் பத்ரிநாத் மறைவு குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் இராம சுகந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், சென்னையின் முதன்மையான கண் சிகிச்சை மருத்துவமனையான டாக்டர் பத்ரிநாத் நிறுவனர் சங்கர் நேத்ராலயாவின் மறைவுக்காக குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவை சென்னையில் நிறுவியவர். டாக்டர் பத்ரிநாத் வெளிநாடுகளில் தனது படிப்பு மற்றும் ஆராய்ச்சியை முடித்த பிறகு, 1978 இல் இந்த அமைப்பை நிறுவினார். இதன்மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
1963ம் ஆண்டில், மெட்ராஸ் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பட்டம் பெற்றவர் பத்ரிநாத். பின்னர் அமெரிக்கா சென்று அங்குள்ள நியூயார்க் கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது இன்டர்ன்ஷிப் மற்றும் ஒரு வருட உள் மருத்துவப் படிப்பை முடித்தார். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் கண் மருத்துவத்தில் அடிப்படை அறிவியல் படிப்பைத் தொடர்ந்து, நியூயார்க்கின் புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் பணியாற்றினார். 1970ல் இந்தியா திரும்பினார். 1970 முதல் 6 ஆண்டுகள் வரை தன்னார்வ சுகாதார சேவைகளில் பணியாற்றினார்.
பின்னர் உபயேதாரர்கள் குழுவுடன் சேர்ந்து 1978ம் ஆண்டு சென்னையில் மருத்துவம் மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவினார். இது சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு பிரிவு ஆகும். ஒவ்வொரு நாளும் 100 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது. மேலும் பல ஆயிரம் பேருக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை உள்பட கண் மருத்துவமும் செய்துள்ளது.
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இன்று இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு கடந்த 1996ம் பத்மபூஷன் வழங்கியது. பின்னர், பத்மஸ்ரீ மற்றும் டாக்டர் பிசி ராய் விருது உட்பட பல விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது.