நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அமோக வெற்றிபெற்று 6வது முறையாக சாம்பியன் ஆனது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. 50 ஓவரில் 240 ரன்னுக்கு ஆலவுட் ஆனது இந்தியா.

5 முறை உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா இந்த முறையும் கோப்பையை வெல்லவேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கினர்.
6.6 ஓவரில் 47 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை நான்காவது விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்து லபுஷேன் – ஹெட் ஜோடி ஆஸ்திரேலியாவை சரிவில் இருந்து மீட்டு கோப்பையை வென்றனர்.
ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர்.

அதிகபட்சமாக ஹெட் 137 ரன்களும் லபுஷேன் 58 ரன்களும் எடுத்தனர்.

இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியுடன் மோதுவதை நினைத்துப்பார்க்காமல் இந்திய அணி அசலாட்டாக விளையாடியதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
[youtube-feed feed=1]உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இந்தியா 240 ஆலவுட்… ஆஸி-யை தோற்கடிக்க ரோஹித் சர்மா புதிய வியூகம் ?