ண்டன்

ங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அசுத்தமான நீர் அல்லது கடல்நீரைச் சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருளாகவும், சுத்திகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றக்கூடிய புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் சூரிய சக்தியால் இயங்குகிறது.  இது மிதக்கும் செயற்கை இலை என அழைக்கப்படுகிறது.

இந்த சாதனத்தை தாவரங்கள் சூரிய ஒளியை உணவாக மாற்றும் ஒளிச்சேர்க்கையின் அடிப்படையில் உருவாக்கி உள்ளனர், அடிப்படை வளங்கள் இல்லாத பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். இது சுத்தமான எரிபொருள் மற்றும் நீர் கிடைப்பதற்கான தீர்வுகளுக்கு ஒரு உதாரணமாக அமையும் என்றும் கூறுகின்றனர்.

ஏற்கனவே கண்டுபிடித்த ‘செயற்கை இலை’ சாதனத்திற்குச் சுத்தமான நீர் ஆதாரங்கள் தேவை.ஆனால்  இப்போது கண்டுபிடித்துள்ள புதிய சாதனத்தை அசுத்தமான தண்ணீரில் பயன்படுத்தலாம்.என்பதுடன் அந்த தண்ணீரைச் சுத்திகரித்து சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய முடியும்.  ஆகவே, ஒரே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்த சாதனம் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.