சென்னை: நெல்லைக்கு கூடுதலாக டிசம்பர் வரை வாரத்தில் ஒருநாள் சிறப்பு வந்தேபாரத் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
தீபாவளி விடுமுறையை ஒட்டி கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, எக்மூர் நாகர்கோவில், தாம்பரம் – திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி, தென்காசி பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியது. அத்துடன் வந்தேபாரத் சிறப்பு ரயிலையும் இயக்கியது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், இனிமேல் டிசம்பர் மாதம் இறுதிவரை சென்னையில் இருந்து நெல்லைக்கு கூடுதலாக வியாழக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு வந்தேபாரத் ரயில் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அதன்படி, நவம்பர் 16ம் தேதி (வியாழக்கிழமை முதல் டிசம்பர் 28ம் தேதி வரை, 7 வாரம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், இந்த ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் காலை 6மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15மணிக்கு நெல்லை வந்தடையும். பின்னர், நெல்லையில் இருந்து மாலை 3மணிக்கு புறப்பட்டு, இரவு 11.15மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.