சென்னை

மிழக அரசு மின் வாரியத்துக்கு ரூ.19ய்.10 கோடி இழப்பீடு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழக அரசு கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி அறிவித்த மின் கட்டண உயர்வு தங்களைப் பெருமளவில் பாதிப்பதாகச் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக அரசு இதனை ஏற்று மின் பயன்பாட்டைப் பொறுத்து 15-ல் இருந்து 25% வரை மின் கட்டணத்தைக் குறைத்து அரசாணை வெளியிட்டது. மின் வாரியத்திற்கு இதனால் ரூ.196.10 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

மின் வாரியத்திற்கு ஏற்கனவே ரூ.145 கோடி இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ரூ.196.10 கோடி இழப்பீட்டு நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.