சென்னை: தீபாவளியை முன்னிட்டு கடந்த ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடைகள் திறந்திருந்ததால், அதற்கு பதிலாக நவம்பர் 13, 25ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் என்ற முடிவில், மக்களுக்கு பொருட்கள் வழங்கும் வகையில் நவம்பர் 3 மற்றும் 10ம் தேதி (நாளை) வேலை நாட்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இந்த வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில், தீபாவளிக்கு அடுத்தநாள் (நவம்பர் 13ஆம் தேதி) திங்கட்கிழமை மற்றும் நவம்பர் 25 (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் வருகின்ற ஞாயிற்று கிழமை (நவம்பர் 12ஆம் தேதி) தீபாவளி பண்டிகை என்பதால், அன்றைய தினமும் வரும் 25ந்தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதால், ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் கடைகளில் உள்ள இருப்பை சரிபார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.