ர்ணாகுளம்

கேரளாவில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையொட்டி தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது

இன்று கலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டரங்கில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்து 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவை மட்டுமின்றி நாடெங்கிலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், கேரள குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ மற்றும் தேசியப் பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

அவர் இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் கேரள டிஜிபி கூறியுள்ளார்.

திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், தானாக ஒருவர் சரணடைந்துள்ளார். தாமே வெடிகுண்டு வைத்தது எனக்கூறி அவர் சரணடைந்துள்ளார்.  காவல்துறையினர் அந்த நபரை முழுவதுமாக நம்பாவிட்டாலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் மற்றும் கேரளாவிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.