சென்னை
பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக பாஜகவின் வளர்ச்சிக்கு உதவி செய்வதாகக் கூறி உள்ளார்.
இன்று பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.
அண்ணாமலை தனது பதிலில்,
“பாஜக தொண்டர்கள் கொடிக்கம்பம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டது கட்சிக்கு மிகவும் நல்லது தான். பொதுவாக அரசியல் கட்சிகளை பொறுத்தவரை இரண்டு விதமான வளர்ச்சி இருக்கும்.அதில் ஒன்று தானாக வளர்ந்து வருவது, மற்றொன்று மற்றொரு கட்சி அந்த கட்சியை வளர்த்து விடுவது.
அவ்வகையில் திமுக பாஜகவின் வளர்ச்சிக்கு அதிக உதவிகளைச் செய்து வருகிறது. இவை போன்ற சம்பவங்களைச் சந்திக்கும் போது தான் ஒரு தொண்டன் தலைவனாக முடியும். சென்னை நகரில் ஏராளமான திமுக கொடிக் கம்பத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர்..
பாஜக சார்பாக நவம்பர்.1 முதல் 100 நாட்களுக்கு 100 கொடிக் கம்பங்கள் நடப்படும். இன்றே கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கொடிக் கம்பங்கள் நடப்படும்.
திமுகவினர் சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று நினைக்கிறார்கள். ஆகவே கொடிக் கம்பங்களைத் தாமதமாக வைத்து வந்த தொண்டர்கள் இதன் பிறகு துரிதமாக வைப்பார்கள்.”
என்று கூறினார்.