சென்னை: பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுபோல நாவலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் கிடையாது என்றும் அறிவித்து உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் #களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று வளர்ச்சிப் பணிகள் குறித்து 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பு, பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு, பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து: ரூ.5.50ஆக குறைக்கபட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும், 10 வீடுகளுக்கும் குறைவாக, 3 மாடிகளுக்கும் மிகாத, மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்கட்டண சலுகை வழங்கபடும் என முதல்வர் தெரிவித்தார்.
மேலும், வளர்ச்சிப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள்நிறைவேற்றி தர வேண்டும் என 4 மாவட்ட ஆட்சியர்களுடனான கள ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார் . அப்போது, திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அதிகாரிகளின் சிறப்பான பணியால் மக்களை சென்றடைந்துள்ளது. அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் மாநகராட்சி சாலை பணிகள், நகராட்சி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வளர்ச்சிப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றி தர வேண்டும். அரசின் உட்கட்டமைப்பு பணிகள் பெரும் நிதிஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. உட்கட்டமைப்பு பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறாவிட்டால் திட்ட செலவு அதிகமாகும். வளர்ச்சித் திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
நாவலூர் சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது சென்னை அருகே நாவலூரில் உள்ள கட்டண சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்தார்.
அடுக்குமாடி-பொது மின் இணைப்புக்கு கட்டணம் குறைப்பு அடுக்குமாடி குடியிருப்பு, பொது மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து ரூ.5.50ஆக குறைப்பு. 10 வீடுக்கும் குறைவாக, 3 மாடிக்கும் மிகாத,மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்கட்டண சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.