டெல்லி: பிரதமர் மோடியால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறார் அதானி என குற்றம் சாட்டிய ராகுல்காந்தி,மின் கட்ட உயர்வுக்கு அதானியே காரணம், பொதுமக்கள் தங்கள் வீட்டின் சுவிட்ச் பட்டனை அழுத்தும்போது அதானியின் பாக்கெட்டில் பணம் வருகிறது என்று கடுமையாக சாடினார்.
டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ‘அதானியும் மர்மமான நிலக்கரி விலை உயர்வும்’ குறித்த ஊடக அறிக்கையை ராகுல் காந்தி காட்டினார். பைனான்சியல் டைம்ஸின் சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டி, அதானி இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரியை வாங்குகிறது என்றும், அது இந்தியாவுக்கு வரும்போது அதன் விலை இரட்டிப்பாகும் என்றும் கூறியிருப்பதாகவும், அதானியை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்தியாவில் மின் விலை உயர்வுக்கு அதானியே காரணம் என்று செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டிய ராகுல், நிலக்கரிக்கு அதிக விலை நிர்ணயம் மூலம் குடிமக்களின் பணம் அதானியின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், தொழிலதிபர் கவுதம் அதானியை சரத்பவார் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் கூறிய ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவரிடம் அதுகுறித்து கேட்கவில்லை என்று கூறியதுடன், சரத் பவார் இந்தியாவின் பிரதமர் அல்ல என கூறினார்.
மேலும், அதானியை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி குற்றம் சாட்டியதுடன், இதுதொடர்பான கட்டுரை பைனான்சியல் டைம்ஸில் வெளியாகி உள்ளதாகவும், அந்த பத்திரிகையை செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி மேற்கோள் காட்டி பேசினார்.
அப்போது, அதானி இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரியை வாங்குகிறது என்றும் அது இந்தியாவை அடையும் போது அதன் விலை இரட்டிப்பாகும் என்றும் , “₹32,000 கோடி” என்ற அளவில் எண்ணிக்கை உயரும் என்று தெரிவித்த ராகுல், “ஒவ்வொரு யூனிட்டிற்கும் மக்கள் அதிக கட்டணம் செலுத்துகிறார்கள் என்று கூறினார்.
இந்தோனேசியாவில் அதானி நிலக்கரியை வாங்குகிறார், நிலக்கரி இந்தியாவுக்கு வருவதற்குள், அதன் விலை இரட்டிப்பாகிறது…நமது மின்சார விலை ஏறுகிறது. அவர் (அதானி) ஏழை மக்களிடம் பணம் வாங்குகிறார். இந்த விலை உயர்வு, பிரதமர் மோடியின் பாதுகாப்பு இல்லாமல் சாத்தியமில்லை என்று குற்றம் சாட்டிய ராகுல், இதுகுறித்து இன்னும் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
‘‘இந்த முறை பொதுமக்களின் பாக்கெட்டில் இருந்துதான் திருட்டு நடக்கிறது.. அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மக்கள் கூடுதலாக பின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மக்களின் அத்தனை வருமானங்களும் அதானியின் பாக்கெட்டுகளுக்கு நேரடியாக செல்கிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டின் சுவிட்ச் பட்டனை அழுத்தும்போது அதானியின் பாக்கெட்டில் பணம் வருகிறது என்றவர், இதுபோன்ற முறைகேடுகளில் அதானி நிறுவனம் வெவ்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது என்றவர், இதுதொடர்பாக மக்கள் கேள்விகள் கேட்கிறார்கள், ஆனால் இந்தியாவில் எதுவும் நடக்கவில்லை என்றவர், இந்த கதை எந்த அரசாங்கத்தையும் வீழ்த்தும். இது நேரடியான திருட்டு என்றும் சாடினார்.
பிரதமர் மோடி, அதனை குழுமத்தை பாதுகாப்பதன் காரணமாகவே இந்த முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டியவர், இந்த விஷயத்தில் நான் பிரதமருக்கு மட்டுமே உதவுகிறேன், அதானி குழும முறைகேடு பற்றி பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன், நிலக்கரி இறக்குமதி மூலம் அதானி குழுமம் 12,000 கோடி முறைகேடு செய்துள்ளது என்றவர்,
ஆனால், இது தொடர்பாக இந்திய ஊடகங்கள் எந்த கேள்வியும் எழுப்பவில்லை அமைச்சர் இதுபற்றி எதுவும் பேசவில்லை, அவரது பாதுகாப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை என்று ராகுல் காந்தி கூறியவர், கர்நாடகாவில் மின்சார மானியம் கொடுத்தோம், மத்திய பிரதேசத்திலும் அதையே செய்வார்கள் என்றவர், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றும் ராகுல்காந்தி கூறினார்.