ராய்ப்பூர்
நாடெங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நேற்று இதே கருத்தை வலியுறுத்தி மல்லிகார்ஜுன கார்கே வும் நேற்று விரிவாக பேசி உள்ளார்.
நேற்று ராய்ப்பூரில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய கார்கே,.
”காங்கிரஸ் கட்சி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பதாக பாஜக கூறுகிறது. ஆனால் காக்கிரஸ் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளது. அது ஜனசங்கமாக இருந்தாலும் சரி, பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ்.சாக இருந்தாலும் சரி, அவர்கள்தான் பெண்களுக்கு எதிராகப் பெண்கள் முன்னேறுவதை விரும்பமாட்டார்கள்.
அவர்களுக்குப் பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் ஏழைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இப்போதே அமல்படுத்த வேண்டும். தற்போதைய மசோதாவின் படி 2034-க்கு முன் அமல்படுத்த முடியாது.
நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு. பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கணக்கெடுப்பை விரும்புகிறோம். இதனால் அவர்களில் எத்தனை பேர் மிகவும் பின்தங்கியவர்கள், எத்தனை பேர் கல்வியறிவு பெற்றவர்கள், எத்தனை பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் போன்ற தகவல்கள் கிடைக்கும்.
இந்த விவரங்கள் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியிடப்பட்டு அதன் மூலமே அவர்கள் மேம்பாட்டுக்காக நாம் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே நாங்கள் பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அதே நேரம் பிரதமர் மோடியோ, நாட்டை பிளவுபடுத்தவும், பெண்களின் உரிமைகளைப் பறிக்கவும் விரும்புகிறார். அன்பான மோடிஜி அவர்களே, மக்கள் தற்போது விழிப்புணர்வு அடைந்து விட்டதால் உங்கள் விளையாட்டெல்லாம் நீண்ட காலம் நீடிக்காது.”
என்று உரையாற்றி உள்ளார்.