டில்லி

பீகாரின் சாதி வாரி கணக்கெடுப்பு ஒரு அரசியல் சதி என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறி உள்ளார்.

நேற்று முன்தினம் பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அந்த மாநில அரசு வெளியிட்டது. நேற்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவரும், பாஜ.க கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான சிராக் பாஸ்வான் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

சிராக் பாஸ்வான் தனது பதிவில்

”பீகார் அரசு வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களில் அரசியல் சதி தெளிவாகத் தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட சாதி அரசியல் ஆதாயம் பெறும் வகையில் அதன் எண்ணிக்கை கூட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் பல சாதிகளைச் சேர்ந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை விடக் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது

தனது விருப்பம்போலும், அரசியல் பலன் பெறும் வகையிலும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை.

எனது சாதியான பாஸ்வான் எண்ணிக்கையும் கூட குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. மொத்தத்தில் நாங்கள் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை நிராகரிக்கிறோம்.

ஆகவே முழு வெளிப்படைத்தன்மையுடன் புதிதாகச் சாதிவாரி கணக்கெடுப்பைப் பீகார் அரசு நடத்த வேண்டும். அப்போதுதான் அது மக்களுக்குப் பயனளிப்பதாக அமையும்’

என்று தெரிவித்துள்ளார்.