விருதுநகர்
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சீமானுக்குச் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இன்று விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியில் ஒரு நிகழ்வில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம்,
”ஒப்பந்த பணியாளர்களை அரசு அலுவலகங்களில் நியமிக்காமல் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி குறித்து சில கட்சிகள் ஓலமிடுவதைப் போல சீமான் ஓலமிடுகிறார். அவருக்கு தேசிய கட்சிகளை முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவருவது வேலையாக உள்ளது.
சீமான் பாஜகவின் மத அடிப்படையிலான கோட்பாடுகளை மறைமுகமாக அரசியலில் கொண்டு வருகிறார். எப்போதுமே தமிழக மக்கள் சீமான் போன்றவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசு நதிநீர் ஆணையம் கூற்றுப்படி ஒரு நாள் கூட நிறுத்தாமல் கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விடுகிவதை சீமான் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கிருந்து அரசியல் பேசும் சீமான் கடைசியாக எப்போது காவிரியைப் பார்த்தார்? பாஜக தான் காவிரி பிரச்சினையை அரசியலாக்குவதே தவிர. கர்நாடகத்தில் ஆளும் கட்சி காங்கிரஸ்.அல்ல இங்கிருந்து சீமான் போன்றோர் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று பேசுவது அபத்தமானது. எங்களைப் பொறுத்தவரை கர்நாடக பாஜகவினர் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். அதற்காகச் சீமான் குரல் கொடுப்பாரா?”
என்று கேள்விகள் எழுப்பி உள்ளார்.