சென்னை: தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக்காக போராடிய 21 சமுக நீதி பேராளிகளுக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 5 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டிற்காக போராடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் ஒன்று புள்ளி 12 ஹெக்டேர் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடுஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.