சென்னை

மிழக அரசு இன்னும் 12 வாரங்களுக்குள் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

கடந்த  2022 ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதம் ஆட்டோ கட்டணங்களை பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  ஆட்டோ கட்டணங் இந்த உத்தரவின் அடிப்படையில், மாற்றியமைக்க உத்தரவிடக் கோரி ராமமூர்த் தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது,

”ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பாக, தொழிற்சங்கங்கள், ஓட்டுநர்கள், நுகர்வோர் அமைப்புக்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காகப் போக்குவரத்துத் துறை இணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழு கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பாக அரசுக்கு வழங்கிய பரிந்துரை, பரிசீலனையில் உள்ளது.  இது சம்பந்தமாக 12 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்”

என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் இதைப் பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.  அத்துடன், திருத்தி அமைக்கப்படும் கட்டணம் காரணமாகப் பாதிக்கப்படுவோர், நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.