மாஹே

நிபா வைரஸ் பரவலையொட்டி புதுச்சேரி அரசு மாஹே பகுதியில் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

நிபா வைரஸ்  பரவல் கேரளா மாநிலத்தில் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் எல்லைப் பகுதியான புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பகுதியில்  நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையொட்டி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  ஆகவே பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், எனவும் இதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

”அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் 100 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது, மருத்துவமனைக்குக் காய்ச்சலோடு வருபவர்களைத் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்,  தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளின் விவரங்களை சேகரித்துக் கண்காணித்து நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அனைத்து துறையினரும் கொண்டு செல்ல வேண்டும்” 

என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nipah virus, Puducherry govt,  conditions, Mahe,

[youtube-feed feed=1]