டில்லி

ழைகள் விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்

நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கார்கே,

”உணவுப் பொருட்களின் விலை,நாட்டில்  விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. 20% ஏழைகள் மோடி அரசின் ‘கொள்ளை’ காரணமாக, நாள்தோறும் விலைவாசி உயர்வின் அதிகபட்ச சுமையைத் தாங்கி வருகிறார்கள்.

ஏழைகள், விலைவாசி உயர்வால் 7.2 சதவீதம் முதல் 7.6 சதவீத பணவீக்கத்தைச் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக 20 சதவீத பணக்காரர்கள், 6.7 சதவீத பணவீக்கத்தைச் சந்தித்து வருகிறார்கள். இந்த பிரச்சினை, அந்த பிரச்சினை என்று பிரதமர் மோடி பேசி வருகிறார்.

ஆயினும் உண்மையான பிரச்சினையான விலைவாசி உயர்வு பற்றிப் பேசுவது இல்லை. அவர் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பக்கூடாது.  பிரதமர் விலைவாசியைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இதனால் மக்களின் பாதிப்பு முடிவுக்கு வரும். தங்கள் சிரமங்களுக்கு பா.ஜனதாவே காரணம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.  பாஜகவுக்கு வரும் தேர்தல்களில் பாடம் புகட்டி, அதன் ‘கொள்ளை’க்கு நிச்சயம் பழி தீர்ப்பார்கள். இந்த பணவீக்க பிரச்சினையில், பாரதம் வெல்லும், ‘இந்தியா’ வெல்லும்.”

என்று பதிந்துள்ளார்.