சென்னை: தமிழக அரசின் ஆவின் உணவுப்பொருட்கள் திடீரென்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. நெய் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 7வது முறையாக ஆவின் உணவு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், பால் விலை உயர்த்தப்படவில்லை என்பத சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது.
ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல முறை ஆவின் பால், உணவுப்பொருட்கள், இனிப்பு வகைகள், ஐஸ்கிரிம் போன்றவை உயர்த்தப்பட்டு உள்ளன. இதுவரை 6 முறை உணவுப்பொருட்களின் விலைகளை உயர்த்தி உள்ள நிலையில், தற்போது ஆவின் நெய், வெள்ளை போன்றவற்றின் விலையை 3வது முறையாக உயர்த்தி உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நஷ்டத்தில் இயங்கும் ஆவினை தூக்கி பிடிப்பதாக கூறி அவ்வப்போது விலை உயர்வுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், திமுக அரசும், வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் என பல கட்டணங்களை உயர்த்தி உள்ளது.
இந்த நிலையில், தற்போது ஆவின் வெண்ணை, நெய் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது. ஆவின் கடந்த 2021ம் ஆண்டு மே 16, 2021 முதல் ஆவின் பால் விலை ரு.3 குறைப்பாக அதிரடியாக கூறியது. ஆனால், அடுத்த சில மாதங்களில் பால் உள்பட அனைத்து பொருட்களின் விலையையும் அவ்வப்போது முன்னறிவிப்பு இன்றி உயர்த்தி வருகிறது.
2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் மட்டும் 5 முறை பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியது. அதிலும் குறிப்பாக 2022 டிசம்பர் மாதம் 16ம் தேதி ஆவின் பாதம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பின்னர், நடப்பாண்டில் (2023) அதன் விற்பனை விலை மீண்டும் ஒரு கிலோவுக்கு 100 ரூபாயாக உயர்த்தியது. அதாவது, 25.07.2023 அன்று விலை உயர்த்தப்பட்டது. அதன்படி, . நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது.
இநத் நிலையில் இன்று தற்போது ஆவின் நெய், வெண்ணை விலையை மீண்டும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.70 அதிகரித்து ரூ.700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல அரைக்கிலோ ஆவின் வெண்ணை விலை டுரூ.250ல் இருந்து ரூ.280 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக அறிவித்து உள்ளது. ஆவின் நிர்வாகத்தில் தொடர் விலை உயர்வு, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
தமிழக அரசின் ஆவின் உணவுப்பொருட்கள் திடீர் விலை உயர்வு – இன்றே அமல்!